குடும்பங்களின் நிதி நிலைமை சீரழிவதற்கான முக்கிய காரணங்கள்

 

 • குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் ஸ்மார்ட்போன் உள்ளது. ஸ்மார்ட்போன் உங்கள் பொன்னனான நேரங்களை திருடுகிறது.
 • சமூக அழுத்தத்தின் கீழ் விடுமுறைகள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் சமூகம் தீர்மானிக்கிறது. உங்கள் உற்றோர் உறவினர் சுற்றுலா சென்றால் நீங்களும் செல்லவேண்டும் இல்லையேல் இச்சமூகம் உங்களை குறைத்து மதிப்பிடும்.
 • கார் அல்லது கேஜெட்களை ஸ்டேட்டஸ் சிம்பலாக வாங்குவது.
 • வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவைத் தவிர்ப்பது மற்றும் வார இறுதி நாட்களில் தேவையில்லாமல் வெளியே சாப்பிடுவது.
 • சலூன்கள், பார்லர்கள் மற்றும் ஆடைகளுக்கு பிராண்ட் கான்ஷியஸ்.
 • ஒழுக்கமற்ற வாழ்க்கைமுறை மருத்துவச் செலவுகளை அதிகரிக்கிறது.
 • குடும்பத்துடன் ஒன்றாக நேரத்தைச் செலவழிப்பதை விட அதிகப் பணத்தைச் செலவழித்து பிறந்தநாள் மற்றும் ஆண்டுவிழாவை சிறப்பாக்க முயற்சித்தல்.
 • பிரமாண்ட திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்கள்.
 • மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றவற்றின் வணிகமயமாக்கல்.
 • நீங்கள் இதுவரை சம்பாதிக்காத பணத்தை கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலவழித்தல்.
 • ஒவ்வொரு விலையுர்ந்த பொருட்களின் பின்னும் அதன் பராமரிப்புச் செலவு ஒளிந்துள்ளது. கார்களை எடுத்துக்கொண்டால் 6 மாதம் ஒருமுறை சர்வீஸ். குறைந்த பட்சம் 5000 ரூபாய். கார்களின் விலையை பொறுத்து உங்கள் சர்வீஸ் கட்டணமும் அதிகமாகும்.

நமது தேவைகளையும் வருமானத்தையும் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கை முறையை நகலெடுக்கிறோம். இது குறைக்கப்படாவிட்டால், அது பல வருடங்கள் தொடர்ந்து சென்று மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும்.

You may also like...