பணத்தை உருவாக்கும் வெற்றி சூட்சமம்

நாம் அனைவரும் எதிர்பார்ப்பது பணம். அள்ள அள்ள குறையாத பணம்!

இக்கட்டுரை பொருந்தாது?

ஒருவேளை உங்கள் தலைமுறையில் உங்கள் அப்பாவோ, தாத்தாவோ அல்லது வேறு யாரோ விட்டு சென்ற சொத்துகள் இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. உங்களுக்கு இக்கட்டுரை பொருந்தாது.

சோம்பேறிகளுக்கும், அதிர்ஷ்டத்தை சார்ந்து வாழும் நபர்களுக்கும் இக்கட்டுரை பொருந்தாது. ஏனெனில் இவர்களின் தேவைகள் எளிமையானவை.

பணக்காரனாக வேண்டும் என்ற மன உறுதியுடன், சில குறைந்த பட்சத் தகுதிகளை பெற்றிருக்கும் நபர்களுக்கே இக்கட்டுரை பொருந்தும்.

குறைந்த பட்சத் தகுதிகள்:
  1. ஆசைப்பட வேண்டும்.
  2. ரிஸ்க் எடுக்க வேண்டும்.
  3. கடன்கள் இருக்க கூடாது.
  4. மாதாந்திர வருமானம் வரும் ஒரு வேலை அல்லது தொழில்.
  5. கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
  6. பொறுமை வேண்டும்

செல்வதை ஈர்க்கும் மந்திர காந்தம் இந்த குறைந்த பட்ச தகுதிகளே!

செல்வத்தை எப்படி உருவாக்குவது?

செல்வத்தை உருவாக்குவது ஒரு நீண்ட கால செயல். முதலில், நீங்கள் மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும்: (1) பணம் சம்பாதித்தல், (2) பணத்தைச் சேமித்தல் மற்றும் (3) பணத்தை முதலீடு செய்தல். இவை அடிப்படை விஷயங்கள். இதுபோக கீழ்கண்ட உத்திகளையும் நீங்கள் செய்ய வேண்டும்.

  • நீண்ட கால முதலீடு
  • அடிப்படை நிதி அறிவு
  • ஆபத்து மற்றும் வெகுமதியைப் புரிந்துகொள்வது
  • தேவைப்படும் இடங்களில் பொருத்தமான ரிஸ்க்

இந்த அடிப்படை உத்திகளுடன் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் உங்கள் வாழ்நாளைக் கடந்தும், உங்கள் வாரிசுகளுக்கு நீளும் தலைமுறைச் செல்வத்தை உருவாக்கலாம்.

மேற்கூறிய உத்திகளை பார்ப்பதற்கு எளிமையாக தோன்றினாலும் பின்பற்றுவது கடினம்.
எந்த ஒரு முதலீடும் குறைந்தது 10 ஆண்டுகளேனும் மேற்கொள்ள வேண்டும். இந்த 10 ஆண்டுகளில் சில கட்டாய செலவுகள் வரலாம், உங்கள் முதலீடு நஷ்டத்தில் செல்லலாம். இன்னும் உங்கள் முதலீட்டை தொடர செய்ய காரணங்கள் ஆயிரம் வரலாம், ஆனால் அதனிலிருந்து உங்கள் முதலீட்டை காப்பாற்றுவதில் இருக்கிறது உங்கள் செல்வதை உருவாக்கும் வெற்றி சூட்சமம்.

You may also like...