கடன் ஸ்னோஃப்ளேக் முறை
கடன் ஸ்னோஃப்ளேக் முறை (Debt Snowflake Method) – கடன் நம் நிம்மதியை, சந்தோசத்தை இழக்க செய்யும் அரக்கன். அந்த அரக்கனின் பிடியில் சிக்கி சிரமப்படுபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அதிலிருந்து விரைவாக வெளியேற உதவும் ஒரு முறை உள்ளது – அதுவே ‘ஸ்னோஃப்ளேக் முறை’.
கடன் ஸ்னோஃப்ளேக் முறை என்னவென்றால், சிறிய அளவு கடன் திருப்பி செலுத்துதல் நாளடைவில் ஒரு பெரிய வித்தியாசத்தை உருவாக்கும். சிறிய ஸ்னோஃப்ளேக்ஸ் ஒரு பெரிய பனி பாறையாக மாறுவதை போல் – சிறிய கடன் செலுத்துதல்கள் உங்கள் கடனை ஒரு பெரிய அளவில் குறைக்க உதவும்.
ஸ்னோஃப்ளேக் முறையை திறம்பட செய்வது எப்படி?
1. கிரெடிட் கார்டு கடனை செலுத்துதல்
கிரெடிட் கார்டு வைத்திருப்பது என்பது உங்களிடம் அதிகமாக பணம் உள்ளது என்ற மாயையை உண்டு செய்யும் – இது உங்கள் செலவுகளை அதிகரிக்கலாம்.
உங்கள் கிரெடிட் கார்டு பில்களைப் சரி பார்ப்பதில் தொடங்குங்கள், கணக்கில் வராத கூடுதல் கட்டணங்களை நீங்கள் செலுத்துகிறீர்களா என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சில வெகுமதிகள்/வருமானங்களைப் பெறுவதற்கு உங்களுக்கு உதவக்கூடியவற்றை நீங்கள் அடையாளம் காணும் விதத்தில் உங்கள் செலவுகளைப் பிரிக்கவும். மற்றும் மிக முக்கியமாக, உங்கள் கடன் வரம்பு உங்கள் தனிப்பட்ட செலவின வரம்பு அல்ல – உங்களுக்கென ஒரு கடன் ஒழுக்கத்தைக் கண்டறிந்து அதைக் கடைப்பிடிக்கவும்!
எடுத்துக்காட்டாக:- உங்களிடம் கிரெடிட் கார்டு உள்ளது, அதன் நிலுவைத் தொகை ரூ. 1,00,000 ரூபாய், மாதாந்திர வட்டி 3%, குறைந்தபட்ச கட்டணமாக மாதம் 5000 செலுத்துகிறீர்கள். இந்த கடனை திருப்பிச் செலுத்த உங்களுக்கு 31 மாதங்கள் ஆகும், மேலும் 55,000 வட்டிக்கு மட்டுமே போகும்.
இருப்பினும், கூடுதலாக 1000 ரூபாய் செலுத்தினால் (5000 ரூபாய்க்கு பதில் 6000 ரூபாய்), உங்கள் கடன் 24 மாதங்களில் அடைபடும். வட்டியும் 40,000 ரூபாயாக குறையும்.
2. சிறிய விஷயங்கள் – ‘பெரிய’ மாற்றங்கள்
கடன் ஸ்னோஃப்ளேக் முறை – பெரிய மாற்றங்களை உருவாக்க – பல சிறிய வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்ய பரிந்துரைக்கிறது.
ஆடம்பரத்தை நோக்கிச் சாய்வதாக நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு மாதமும் ஒரு செலவைக் குறையுங்கள்.
அது ஹோட்டல் உணவிற்கு பதில் வீட்டு உணவை தேர்ந்தெடுப்பதாக கூட இருக்கலாம்.
3. உங்கள் பணத்தில் ஸ்னோஃப்ளேக்ஸ்
பட்ஜெட் போடுவதின் மிக முக்கிய நன்மை என்னவென்றால், அந்த பட்ஜெட்டில் பல ஸ்னோஃப்ளேக்குகளைக் கண்டறிய முடியும்.
– உங்கள் கிரெடிட் கார்டுகளை கவனமாக உபயோகிக்கவும். வெகுமதிகளை எவ்வாறு அதிகப்படுத்துவது என்பதைக் கண்டறியவும். சில கிரெடிட் கார்டுகள் உபயோகித்தை பொறுத்து பெட்ரோல் போன்றவற்றை இலவசமாக வழங்குகின்றன.
- எந்த ஆன்லைன் பர்ச்சேஸையும் செய்வதற்கு முன் பெரும்பாலான பரிந்துரைகளை பரிசீலித்து முடிவெடுங்கள்.
- நிறைய வலைத்தளங்கள் கூப்பன்-கள் தருகின்றன – இறுதிச் செக் அவுட்டுக்கு முன் அவற்றைப் பயன்படுத்தி தள்ளுபடி பெறுங்கள்.
- உங்கள் ஷாப்பிங்கை பண்டிகை காலங்களில் வைத்து கொள்ளுங்கள், ஏனெனில் FLIPKART, AMAZON போன்ற வலைத்தளங்கள் பண்டிகை காலங்களில் நிறைய சலுகைகள் வழங்குகின்றன.
இந்த போன்ற எளிய தந்திரங்களுக்கு புத்திசாலித்தனம் தேவையில்லை, ஆனால் உங்கள் செலவுகள் பற்றிய பொதுவான விழிப்புணர்வு மற்றும் கடன்-பொறியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த சிறிய மாற்றங்கள் உதவும்.






Users Today : 66
Users Yesterday : 140
Total Users : 88015
Views Today : 427
Total views : 744342