ராகேஷ் ஜுன்ஜுன்வாலா – சில பாடங்கள்
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா – இந்திய பங்குச்சந்தையின் மாபெரும் காதலன். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்திய பங்குச்சந்தையை தன் விரலசைவில் ஆட்டுவித்த மாபெரும் வித்தகர். பிக் புல் ஆஃப் இந்தியா (Big Bull of India) என்று அன்புடன் அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, இந்தியாவின் வளர்ச்சியில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது மறைவு பங்குசந்தைகளுக்கு ஓர் மாபெரும் இழப்பு.
அவருடைய வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய சில பாடங்களைப் பார்ப்போம்.
- முதலீட்டாளர் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், சந்தையில் பல திருத்தங்கள் வரலாம், அந்த திருந்தகளில் தான் நம் வாய்ப்புகளை நாம் பெற முடியும்.
- ஒவ்வொருவரும் முதலீடு செய்வதற்கு முன் தங்களின் ரிஸ்க் அளவை அறிந்து கொள்ள வேண்டும், உங்கள் ரிஸ்க் அளவின்படி மட்டுமே முதலீடு செய்யுங்கள், உங்களுக்கு இன்னும் இத்தனை காலம் தேவைப்படாத பணத்தை மட்டுமே முதலீடு செய்யுங்கள்.
- எந்தப் பங்குகளுடனும் உணர்ச்சிப்பூர்வமாக இனைய வேண்டாம், உணர்ச்சிப்பூர்வமான முதலீட்டைத் தவிர்க்கவும், சில சமயங்களில் நமக்குப் பிடித்த பங்குகள் பல வருடங்கள் செயல்படாமல் போகலாம், ஆனால் உணர்ச்சி ரீதியான இணைப்பின் காரணமாக நீங்கள் தொடர்ந்து அந்த பங்குகளை வாங்கி, சரியான நேரத்தில் வெளியேறாமல் நஷ்டம் அடையலாம்.
- சந்தையில் எப்போதும் வேகம் இருக்கும், சில சமயங்களில் காளைகள் கரடிகளை பிடிக்கும், கரடிகள் காளைகளை பிடிக்கும், அது நடுநிலையாக இருக்காது, எப்போதும் சந்தையின் வேகத்தை அறிந்து செயல்படுங்கள்.
- முதலீட்டாளர் பொறுமையாக இருக்க வேண்டும், பங்குகளை வாங்குவது, விற்பது மட்டுமே முடிவு என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் பங்குகளை வைத்திருப்பது இன்னுமொரு முடிவு, வணிகம் சிறப்பாகச் செயல்படும் வரை மற்றும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் வரை நீங்கள் பங்குகளை வைத்திருக்கலாம். சில வெளிப்புற காரணிகளால் பங்குகளை விட்டு வெளியேறாதீர்கள்.
- நீங்கள் அவசரத்திற்காக சேமித்த பணத்தை முதலீடு செய்யாதீர்கள் அல்லது கடன் வாங்கி பணத்தை முதலீடு செய்யாதீர்கள், நீங்கள் சரியான நேரத்தில் வெளியேறவில்லை என்றால் பெரும் நிதி நெருக்கடிக்கு நீங்கள் ஆளாக நேரிடும்.
- உங்கள் தவறை ஏற்றுக் கொள்ளுங்கள், உங்கள் தவறிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், யாரும் எப்போதும் சரியாக இருக்க மாட்டார்கள், எல்லா வர்த்தகத்திலும் ஸ்டாப் லாஸ் நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.
ஒருவேளை நீங்கள் பணத்தை இழக்க நேரிட்டால், பழிவாங்கும் வர்த்தகம் செய்யாதீர்கள்.
ஒவ்வொரு வர்த்தகத்தையும் ஆராயுங்கள் உங்கள் வெற்றிக்கான மந்திரச் சாவி அதில் ஒளிந்திருக்கலாம்.






Users Today : 72
Users Yesterday : 131
Total Users : 88574
Views Today : 364
Total views : 745973