பணத்தை சேமிப்பதில் மிக கடினமான விஷயம் – அதை தொடங்குவது தான்
செல்வமின்றி, சுதந்திரமில்லை
சேமிப்பின்றி, முதலீடு இல்லை முதலீடுயின்றி, கூடுதல் வருமானம் இல்லை கூடுதல் வருமானமின்றி, கூடுதல் முதலீடு இல்லை கூடுதல் முதலீடுயின்றி, கூட்டு வளர்ச்சியின் சக்தி இல்லை கூட்டு வளர்ச்சியின் சக்தியின்றி, செல்வம் இல்லை செல்வமின்றி, சுதந்திரமில்லை
9 பொதுவான நிதி தவறுகள்
வருமானத்தை விட அதிக செலவு செய்தல் முடிவில்லாத கடன் சம்பாதிக்கும் முன்பே, அந்த பணத்தை செலவு செய்தல் ஆடம்பர பொருட்கள் வாங்குதல் வீட்டிற்கு அதிகமாக செலவு செய்தல் புதிய செலவுகளை உருவாக்குதல் முதலீடு செய்யாமல் இருத்தல் சேமித்து கொண்டே முதலீடு செய்தல் பட்ஜெட் இல்லாமல் இருத்தல்
செல்வத்தின் மூலப்பொருள்
செல்வத்தை உருவாக்குவதற்கான முக்கிய தேவை – பணம். எவ்வளவு சிறப்பாக உங்கள் போர்ட்ஃபோலியோ (portfolio) உருவாக்கப்பட்டாலும் , ஒரு சிறிய தொகை முதலீட்டில் பெரிய செல்வம் உருவாகாது. எனவே முதலில் உங்கள் தொழில் அல்லது வேலையில் சிறந்து விளங்க வேண்டும், நன்கு சம்பாதிக்க வேண்டும் அதன்பின் செல்வந்தராக தீவிர முதலீடு செய்ய வேண்டும் – அநாமதேய
பணக்காரனாக வாழ வேண்டுமா?
உங்கள் பட்ஜெட்டை உருவாக்குங்கள் கடனில் இருந்து விடுபடுங்கள் இரண்டாம் வருமானத்தை உருவாக்குங்கள் சம்பாதிப்பதை விட அதிகமாக செலவு செய்யாதீர்கள் அவசரகால நிதியை உருவாக்குங்கள் தினசரி பழக்கங்களை உருவாக்குங்கள் புத்திசாலித்தனமான சேமிப்புத் திட்டத்தை உருவாக்குங்கள்
பள்ளிகள் சொல்லித்தராத வாழ்வின் மிக முக்கிய விஷயங்கள்
எப்படி முதலீடு செய்வது. எவ்வாறு வரி செயல்படுகிறது. எப்படி பணம் வேலை செய்கிறது. இடர்களை எவ்வாறு நிர்வகிப்பது. எப்படி பங்கு மற்றும் கிரிப்டோ வேலை செய்கிறது. எப்படி சிந்திக்க வேண்டும்.
பணக்காரர்கள் உங்களிடம் மறைக்கும் சில உண்மைகள்
இளமையில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
1) உங்கள் வருமானத்தை சேமியுங்கள் 2) உங்கள் வசதிக்குக் கீழே வாழுங்கள் 3) உடனடி திருப்தியைத் தவிருங்கள் 4) முதலீட்டை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் 5) நீங்கள் தான் உங்கள் முதல் முதலீடு 6) தொடர்ந்து கற்றுக்கொண்டு உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்
பணக்காரர்கள் உங்களிடம் மறைக்கும் சில உண்மைகள்
சம்பளத்தில் மட்டுமே பணக்காரன் ஆக முடியாது பணவீக்கம் உங்கள் பணத்தை களவாடும். முதலீடு செய்யுங்கள் வளரும் சொத்தை வாங்குங்கள். தேயும் சொத்தை வாங்காதீர்கள் வருமானத்தை விட அதிகமாய் செலவு செய்யாதீர்கள் உங்கள் சம்பளத்தில் முதல் செலவு சேமிப்பாய் இருக்கட்டும் கூட்டு வட்டி அதிசயத்தை உருவாக்கும்
நிதி மேலாண்மை 101
1. உங்கள் செலவுகளை கவனியுங்கள் 2. உங்கள் வருமானத்தில் குறைந்தது 20% சேமியுங்கள் 3. மருத்துவ காப்பீடு = குறைந்தது 5 லட்ச ரூபாய் 4. அவசரகால நிதி = மாதாந்திர செலவை * 6 5. ஆயுள் காப்பீடு = ஆண்டு வருமானம் * 20 6. (100 – உங்கள் வயது) சதவீதத்தை பங்குசந்தையில் முதலீடு செய்யுங்கள் 7. மீதமுள்ளவற்றை VPF/EPF/PPF போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள் 8. பங்குசந்தை முதலீட்டை இன்டெஸ் பங்குகளில் தொடங்குங்கள் 9. உங்கள் வருமானத்தில் 40% குறைவாக EMI -யை பார்த்துக்கொள்ளுங்கள் 10. வீட்டு கடன் தவிர மற்ற கடன்களை முடிந்த வரை தவிர்த்திடுங்கள்
வாரன் பஃபெட்
செலவழித்த பின் எஞ்சியதைச் சேமிக்காதே; சேமித்த பிறகு மிச்சமிருப்பதைச் செலவிடு!
தேடிச் சோறு நிதந்தின்று
தேடிச் சோறுநிதந் தின்று — பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து — நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வேனன்று நினைத்தாயோ? – மகாகவி பாரதியார் சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி பண்முகம் கொண்டவர். கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. இவரை மகாகவி என்று அழைப்பதுண்டு. பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள்…
பணம் அனுபவத்தை சந்திக்கும்போது
பணம் உள்ளவன் அனுபவமுள்ள ஒருவனைச் சந்திக்கும் போது, அனுபவம் உள்ளவன் பணத்துடனும், பணமுள்ளவன் அனுபவத்துடனும் விடைபெறுகின்றனர்! – வாரன் பஃபெட் வாரன் எட்வர்ட் பஃபெட் (Warren Edward Buffett – 1930) அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளர் ஆவார். உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவர். “பெர்க்சயர் ஹாதவே” நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. 2008 ம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரராய் இடம்பெற்றார். அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு 46,000 கோடி ரூபாய்.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 7 பண விதிகள்
பணத்திற்காக நேரத்தை வர்த்தகம் செய்யாதீர்கள் ஒற்றை வருமானத்தை நம்பி இருக்காதீர்கள் வாழ்க்கையை அனுபவிக்க மறக்காதீர்கள் முதலீடு செய்வதற்கு முன் செலவு செய்யாதீர்கள் உங்கள் முதலீடுகள் அனைத்தையும் ஒரே கூடையில் போடாதீர்கள் உங்களுக்கு புரியாத விஷயங்களில் முதலீடு செய்யாதீர்கள் கூட்டு வட்டியை மறவாதீர்கள்





















Users Today : 14
Users Yesterday : 110
Total Users : 85972
Views Today : 53
Total views : 737540